Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09
حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 9
ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕
சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – ஹஸன்)
💕 இப்னு ஒதைமீன் (ரஹ்) – உபகாரத்தை அடிப்படையில் தண்ணீர் தந்தாலும் அதை பெறக்கூடாது அதற்கு பதிலாக தயம்மும் செய்து கொள்ளலாம். பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி உளூ செய்வதே மேலானதாகும்
💠 ஸூரத்துஜ்ஜுமர் 39:9
هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَؕ
…அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?…..
💠 ஸூரத்துல் முஜாதலா 58:11
يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ؕ
…உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் …
مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ 💕
முஆவியா (ரலி) – நபி (ஸல்) – யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக்கொடுக்கிறான் (புஹாரி, முஸ்லீம்)
💕 நாம் அதிகமதிகமாக கல்வியை தேடும்போதும், புத்தகங்களை வாசிக்கும்போதும், புத்தகம் வாசிப்பவர்களுடன் பழங்கும்போதும் தான்; நமக்கு முன் சென்ற அறிஞர் பெருமக்களின் மிகப்பெரும் பணிகளை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.
💕 இமாம் ஷுஹ்பீ (ரஹ்) நீங்கள் எந்த ஒரு மார்க்கக்கல்வியை கேட்டாலும் எழுதுங்கள் எழுத வசதி இல்லையேல் பக்கத்தில் உள்ள சுவற்றிலாவது எழுதுங்கள் என வலியுறுத்தினார்கள்.
💕 முன் சென்ற அறிஞர்கள் எழுதும் அடிக்குறிப்புகள் கூட பிறருக்கு புரியும் விதத்தில் இருந்தது. அவர்களது அடிக்குறிப்புக்களால் முக்கிய குறிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு இரண்டையும் பிரித்து சீராக எழுதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08
حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 8
💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️
நட்பை 3 ஆக பிரிக்கலாம்
- லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة
- நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة
- صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.
- கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
- தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
- மக்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பாராதவராக இருக்க வேண்டும். அது தான் தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
❤ ஸூரத்துல் பகரா 2:273
يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِۚ
….அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;…..
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07
حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 7
- ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள்.
- ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள்.
- பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான ஆசிரியரிடமிருந்து மட்டுமே மார்க்க கல்வியை கற்பார்கள்.
இமாம் மாலிக் (ரஹ்) 4 பேரிடமிருந்து கல்வி கற்கக்கூடாது என அறிவுறுத்தினார்கள்.
- மடையன்
- பித்அத் செய்பவர்
- பொய்யர்
- மார்க்க அறிவில்லாமல் நல்லமல் புரியக்கூடிய நல்ல மனிதர்கள்.
💕 இவர்களிடமிருந்து கல்வி கற்பது கற்பவருக்கும் முழு உம்மத்திற்கும் ஆபத்தானதாகும்.
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06
حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 6
- அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர்.
- இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள்.
- ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள்.
- முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் செய்வதோ அவமதிப்பதோ செய்ததில்லை.
- மரியாதையில் ஷிர்க் குஃப்ர் கலக்காமல் கவனமாக இருந்தார்கள்.
Feb 19
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05
حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 5
- ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள்.
- தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள்.
- சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.
கருத்துரைகள் (Comments)