தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 55

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 55

 வசனம் : 31

 ⇓ ↔ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ 

தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்

 ⇓ ↔ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ 

மறைந்திருக்கும் அலங்காரங்களை வெளிப்படுத்தி கட்டுவதற்காக

ஆகவே காலில் சலங்கையில்லாமல் கொலுசு அணியலாம் என்பது தெரிகிறது ஆனால் கால்களை தட்டி நடந்து ஆண்களின் மனதில் சஞ்சலத்தை உருவாக்க கூடாது

ؕ ⇓ ↔  وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ

மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்

  நீங்கள் அனைவரும் ↔ جَمِيْعًا

  ஈமான் கொண்டவர்களே ↔ اَيُّهَ الْمُؤْمِنُوْنَ

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 54

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 54

 வசனம் 31:

இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளவேண்டும் – وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌

தம் கணவர்கள் – اِلَّا لِبُعُوْلَتِهِنَّ

தம் தந்தையர்கள் – اَوْ اٰبَآٮِٕهِنَّ

தம் கணவர்களின் தந்தையர்கள் – اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ

தம் புதல்வர்கள் – اَوْ اَبْنَآٮِٕهِنَّ

தம் கணவர்களின் புதல்வர்கள் – اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ

தம் சகோதரர்கள் – اَوْ اِخْوَانِهِنَّ

தம் சகசாதாரர்களின் புதல்வர்கள் – اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ

தம் சகோதரிகளின் புதல்வர்கள் – اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ

அல்லது பெண்கள் – اَوْ نِسَآٮِٕهِنَّ

அல்லது வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்கள் – اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ

அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) – اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ

பெண்களின் மறைவான அங்கங்களை பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் – اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 53

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 53

[highlight color=”green”]இஸ்லாமிய பெண்ணின் ஆடை[/highlight]

❖ மறைக்கக்கூடிய பகுதிகளை மறைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

❖ அங்கங்களின் அளவுகளை காட்டக்கூடியதாக இருக்கக்கூடாது.

❖ மெல்லியதாக இருக்கக்கூடாது.

❖ கவர்ச்சியான ஆடையாக இருக்கக்கூடாது(அலங்காரம் இல்லாத ஆடை).

❖ அந்நிய மதத்தவர்களின் ஆடைகளுக்கு ஒப்பாக இருக்கக்கூடாது.

❖ பெண்கள் நறுமணங்கள் பூசி வெளியே வரக்கூடாது.

 நபி (ஸல்) – வீட்டை விட்டு வெளியே வரும்போது நறுமணம் பூசுபவள் விபச்சாரி

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 52

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 52

 வசனம் 31:

وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌

வெளிப்படுத்த வேண்டாம் – وَلَا يُبْدِيْنَ

அவர்களுடைய அலங்காரத்தை – زِيْنَتَهُنَّ

தவிர – اِلَّا

சாதாரணமாக வெளியில் தெரிபவற்றை தவிர – مَا ظَهَرَ مِنْهَا‌

 சாதரணமாக வெளியில் தெரிவது கருத்துக்கள் :

{ ஒரு பெண் இஸ்லாமிய ஆடை அணிந்த பின்னும் அவளுக்கு உள்ள அழகு }

சில அறிஞர்கள் – முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள கைகளையும் அது குறிக்கும்.

சில அறிஞர்கள் – அவசியம் பெண்கள் முகத்தை மூட வேண்டும்.

சில அறிஞர்கள் – முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக வாதிடுகின்றனர். சிலர் கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்ற தேவையில்லை என்கின்றனர். ஆனால் மறைக்கக் கூடாது என்று பேசுகின்றார்கள் அது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து அல்ல.

 பெண்கள் முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக வரவில்லை. ஆகவே தான் இதில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.ஆகவே இது இஜ்திஹாதுடன் சம்பந்தப்பட்ட விஷயம்.

 பொதுவாக ஒரு பெண் முகத்தை திறப்பதனால் பித்னா உருவாக்கும் என்று இருந்தால் அவள் மறைப்பதே சிறந்ததாகும். மறைப்பதால் பித்னா உருவாகும் என்றிருந்தால் திறப்பதே சிறந்ததாகும்.

 ஆகவே முகத்தையும் மணிக்கட்டு வரையிலான கைகளையும் தவிர மற்ற அனைத்தும் மறைத்தே ஆக வேண்டியவை என்பதில் கருத்துவேறுபாடு இல்லை.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 51

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 51

 வசனம் 31:

وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ

பேணிகாத்துக்கொள்ளட்டும் – وَيَحْفَظْنَ

வெட்கத்தலங்களை – فُرُوْجَهُنَّ

: من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة

சஹல் இப்னு ஸஅத் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் தன்னுடைய தொடைகளுக்கு இடையிலிருக்கும் மர்மஸ்தானை பாதுகாக்க எனக்கு உத்தரவாதம் தருகிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பு (புஹாரி)

 ஸூரத்துல் முஃமினூன் 23 : 1 & 5

قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏

(1) ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏

(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 50

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 50

  நபி (ஸல்) விடம் ஒரு பெண் மார்க்கத்தீர்ப்பு கேட்டு வந்தபோது உடனிருந்த பள்லு இப்னு அப்பாஸ் (ரலி) அந்த பெண்ணை திரும்ப திரும்ப பார்த்தபோது நபி (ஸல்) தன் கைகளால் இப்னு அப்பாஸ் (ரலி) அவரது தாடையை பிடித்து முகத்தை திருப்பி விட்டார்கள்.(புஹாரி, முஸ்லீம்)

انما جعل الاستئذان من اجل البصر

சஹல் இப்னு சஹத் (ரலி) – நபி (ஸல்) – அனுமதி பெறவேண்டும் என்பது வலியுறுத்தப்படுவது உங்கள் பார்வைக்காக தான்.  

يا علي لا تتبع النظرة النظرة فإنما لك الأولى وليست لك الآخرة

நபி (ஸல்) – அலியே அந்நிய பெண்ணை திரும்ப திரும்ப பார்க்காதே முதல் பார்வை உன்னுடையது மீண்டும் பார்ப்பது உனக்கெதிரானது (அஹ்மத்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 49

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 49

❤ வசனம் 31 :

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ

மேலும் கூறுங்கள் – وَقُلْ

முஃமினான பெண்களிடம் – لِّـلْمُؤْمِنٰتِ

தாழ்த்திக்கொள்ளட்டும் – يَغْضُضْنَ

அவர்களுடைய பார்வைகளை – مِنْ اَبْصَارِهِنَّ

النَّظّرُ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مِسْمُوْمٍ

நபி (ஸல்) – பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் ஒன்று.

إِيَّاكُمْ وَالْجُلُوسَ فِي الطُّرُقَاتِ، قَالُوا : يَا رَسُولَ اللهِ، مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ

فِيهَا، قَالَ : فَأَمَّا إِذَا أَبَيْتُمْ إِِلا الْ مَجْلِسَ، فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ، قَالُوا : يَا رَسُولَ

اللهِ، فَمَا حَقُّ الطَّرِقِ؟ قَال : غَضُّ البَصَرِ، وَكَفُّ الأَذَى، وَرَدُّ السَّلامِ، وَالأَمْرُ

بِالْمَعْرُوفِ، وَالنَّهْيُ عَنِ الْمُنْكَرْ

அபூ சயீத் அல் குத்ரீ(ரலி) – நபி(ஸல்) – சாலையில் உட்காருவதை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்…..அப்படி நீங்கள் உட்காரவேண்டுமென்றால் பாதைக்குரிய உரிமையை நீங்கள் கொடுக்கவேண்டும் – (غَضُّ البَصَرِ) பார்வைகளை தாழ்த்துவது. (புஹாரி, முஸ்லீம்)

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 48

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 48

❤ வசனம் 30 :

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ

بِمَا يَصْنَـعُوْنَ‏

   (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

கூறுவீராக – قُلْ

முஃமின்களான ஆண்களுக்கு – لِّـلْمُؤْمِنِيْنَ

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும் – يَغُـضُّوْا

அவர்களது பார்வைகளை – مِنْ اَبْصَارِهِمْ

பேணிக்கொள்ளட்டும் – وَيَحْفَظُوْا

வெட்கத்தலங்களை – فُرُوْجَهُمْ‌

அது – ذٰ لِكَ

பரிசுத்தம் – اَزْكٰى

அவர்களுக்கு – لَهُمْ‌

நிச்சயமாக அல்லாஹ் – اِنَّ اللّٰهَ

நன்கு தெரிந்தவன் – خَبِيْرٌۢ

அவர்கள் செய்ப்பவற்றை – بِمَا يَصْنَـعُوْنَ

பொதுவாக ஒரு சட்டம் :

அல்குர்ஆனில் ஒரு சட்டம் ஆண்களுக்கு கூறப்பட்டால் அது பெண்களுக்கும் பொருந்தும்.

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 47

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 47

  அபூபக்கர் (ரலி) – நபி (ஸல்) விடம் – எங்களுடைய பொருட்கள் வேறு ஒருவருடைய வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் பிறர் வசித்தால் அனுமதி கேட்க வேண்டுமா என்று கேட்டபோது தான் இந்த வசனம் அருளப்பட்டது என்று கூறப்படுகிறது.

مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ

நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வை ஒரு மனிதன் சரியாக புரிந்தால் அவன் அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை அஞ்சுவான்

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 46

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 46

  ஜாபிர் (ரலி) நபி (ஸல்) வீட்டிற்கு சென்று அனுமதி கேட்டபோது நபி (ஸல்) யார் என்று கேட்டபோது ஜாபிர் (ரலி) நான் நான் என்றார்கள். நபி (ஸல்) – ஒரு வீட்டில் அனுமதி கேட்கும்போது உங்களுடைய பெயரை சொல்லுங்கள் நான் நான் என்று சொல்லாதீர்கள்.

 إِذَا زَارَ أَحَدُكُمْ أَخَاهُ فَجَلَسَ عِنْدَهُ فَلا يَقُومَنَّ حَتَّى يَسْتَأْذِنَهُ

இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்)- நீங்கள் ஒருவருடைய வீட்டிற்கு சென்று அவருடன் உட்கார்ந்திருந்தால் அவரிடம் அனுமதி கேட்காமல் எழுந்து செல்ல வேண்டாம்.