ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 4

ஸீரா பாகம் – 4

உன் நபியை அறிந்துகொள்

 நபி(ஸல்) – என் தாய் தன் உடம்பிலிருந்து ஒரு பெரும் ஒளி ஏற்பட்டதை பார்த்தாள்.

 நபி(ஸல்) ஹலீமா சஹதியா என்றவரிடம் பால் குடித்து வளர்ந்தார்கள். நபி(ஸல்) வை எடுக்க வரும்போது மெலிந்த கழுதையில், மெல்லிய ஒட்டகத்தில் மக்காவுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அனாதை குழந்தையாக இருந்ததால் அவர்களை யாரும் கொண்டு போகவில்லை. ஆனால் ஹலீமா அவர்கள் நபி(ஸல்) வை கூட்டிச்செல்லும் போது அவர்களது ஒட்டகமும் கழுதையும் நன்றாக ஆகிவிட்டது. ஊரெல்லாம் பஞ்சமாக இருக்கும்போது ஹலீமா அவர்களின் ஆடுகள் மட்டும் செழிப்பாக இருந்தது.

 2 ஆண்டுகள் பால் கொடுத்தபின்னும் நபி(ஸல்) வை பிரிய மனமில்லாமல் மீண்டும் தாயார் ஆமினா அவர்களிடம் அனுமதி பெற்று கொண்டுபோனார்கள்.

 நபி(ஸல்) – விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜிப்ரயீல்(அலை) வந்து நபி(ஸல்) வின் நெஞ்சை பிளந்து ஸம்ஸம் நீரைக்கொண்டு சுத்தப்படுத்தினார்கள். நபி(ஸல்) வின் நெஞ்சு பிளக்கப்பட்டு பிறகு சேர்க்கப்பட்ட அந்த அடையாளத்தை நான் பார்த்தேன் என்று அனஸ்(ரலி) அறிவித்தார்கள். இந்த சம்பவம் நபி(ஸல்) வின் 4 ஆவது வயதில் நடந்தது. ஆதலால் மனமில்லாமல் நபி(ஸல்) வை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்தார்கள்.

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 3

ஸீரா பாகம் – 3

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) வின் வம்சத்தொடர்

இப்ராஹிம் (அலை) விற்கு 2 பிள்ளைகள்

1. இஸ்மாயீல் (மூத்தவர்)
2. இஸ்ஹாக் (இளையவர்)

 இஸ்ஹாக் (அலை)க்கு பிறந்தவர் யஹ்கூப்.

 யஹ்கூப் (அலை)யின் இன்னொரு பெயர் இஸ்ராயீல் (அலை).

 அவர்களிலிருந்து தோன்றியவர்கள் தான் இஸ்ரவேலர்கள்.

 இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் கட்டளைப்படி இஸ்மாயீல் (அலை)யையும் அவரது தாயார் ஹாஜரா அவர்களையும் மக்காவிற்கு அழைத்து வந்து தங்கவைக்கிறார்கள்.

 அந்த இஸ்மாயீல் (அலை)யின் வம்சத்திலிருந்து வந்தவர்கள் தான் நபி முஹம்மத் (ஸல்).

 இப்ராஹீம் (அலை)யும் இஸ்மாயீல்(அலை)யும் கஹ்பாவை கட்டியபோது ஒரு துஆ கேட்கப்பட்டது.

 ஸூரத்துல் பகரா 2:129

رَبَّنَا وَابْعَثْ فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَ يُزَكِّيْهِمْ‌ؕ

اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

   “எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”

 இஸ்மாயீல்(அலை)யின் வம்சத்தில் உருவானவர் அதனான் என்பவர் அவரது வம்சத்திலிருந்து வந்தவர் முஹம்மத் (ஸல்).

நபி(ஸல்) வின் பரம்பரை :

محمد، بن عبد الله، بن كلاب، بن مرة، بن كعب، بن لؤي، بن غالب، بن فهر، بن

مالك، بن النضر، بن كنانة، بن خزيمة، بن مدركة، بن إلياس، بن مضر،بن

. نزار، بن معد، بن عدنان

மேற்கூறப்பட்ட வம்சாவழிப் பிரகாரம் நபி(ஸல்) வின் தந்தையின் பெயர்அப்துல்லாஹ் பாட்டனாரின் பெயர் அப்துல் முத்தலிப் முப்பாட்டனாரின் பெயர் ஹாஷிம்.

 அரபுகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிகள் அந்த குறைஷிகளிலேயே சிறந்தவர்கள் ஹாஷிம் குடும்பத்தார்.

 நபி(ஸல்) தாயின் கர்ப்பத்தில் இரண்டு மாதமாக இருந்தபோது நபி(ஸல்) தந்தை தன் 25ஆம் வயதில் மதீனாவில் இறந்தார். தன் தந்தை வியாபாரத்திற்காக சென்றபோது மதீனாவில் இறந்துவிடுகிறார்.

 ஸூரத்துள் ளுஹா 93:6

اَلَمْ يَجِدْكَ يَتِيْمًا فَاٰوٰى

   (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

 நானும் அனாதையாய் வளர்ப்பவனும் சொர்க்கத்தில் இப்படியிருப்போம் என இரு விரல்களை சேர்த்து நபி(ஸல்) கூறினார்கள் (புஹாரி).

 

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 2

ஸீரா பாகம் – 2

உன் நபியை அறிந்துகொள்

நபி (ஸல்) பிறந்த ஆண்டு கஹ்பா வை இடிக்க வந்த அப்ரஹாவின் படையை அல்லாஹ் நாசமாக்கினான் (சூரத்துல் பீல்). அந்த சம்பவத்தின் 50 நாட்கள் கழித்து நபி (ஸல்) பிறந்தார்.

இயற்பெயர் : முஹம்மத்

தந்தையின் பெயர் : அப்துல்லாஹ்

தாயின் பெயர் : ஆமினா

குடும்பம் : ஹாஷிம்

குலம் : குறைஷ்

பிறந்த நாள் : திங்கள்

தேதி : பிறை 9 (மூத்த அறிஞர்களின் ஆய்வின் படி நபி (ஸல்) பிறந்தது 9 இறந்தது 12 ஆம் நாள் தான் )

மாதம் : ரபீயுல் அவ்வல்

நபி (ஸல்) – திங்கள் கிழமை நோன்பு வையுங்கள் அதில் தான் நான் பிறந்தேன்.

பிறந்த ஊர் : மக்கா (அல்லாஹ் படைத்த ஊர்களில் மிகச்சிறந்த இடம்)

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 1

ஸீரா பாகம் – 1

உன் நபியை அறிந்துகொள்

 ஸூரத்துத் தவ்பா 9:128

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ

رَءُوْفٌ رَّحِيْمٌ‏

   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

 ஸூரத்துத் தவ்பா 9:129

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللّٰهُ ۖ  لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ

   (நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!

 நபியை பின்பற்றுறாதவர் நபியை அறிய வேண்டிய முறைப்படி அறியவில்லை.

 ஸூரத்துல் அஹ்ஜாப 33:56

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

   இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

 நரகத்திற்கு செல்பவன் தான் நபியை அறியாமலும் அவரை புறக்கணிக்கவும் செய்வான்.

 ஸூரத்துல் அஃலா 87: 10, 11, 12

 (10) سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ‏ 

   (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

(11) وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ‏

   ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

(12) الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏

   அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 7

ஸீரா பாகம் – 7

நேசம் இன்றி ஈமான் இல்லை

 ஸூரத்துல் அஹ்ஜாப 33:56

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

➥   இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

 ஸூரத்துல் அஃலா 87:10

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.

 ஸூரத்துல் அஃலா 87:11

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 6

ஸீரா பாகம் – 6

நேசம் இன்றி ஈமான் இல்லை 

 ஸூரத்துத் தவ்பா9:128

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ

رَءُوْفٌ رَّحِيْمٌ‏

   (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

ஸீரா பாகம் – 5

நேசம் இன்றி ஈமான் இல்லை

ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம்

 தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி.

 ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள்.

 சூரா பகரா 2: 45, 46

யார் அல்லாஹ்வை சந்திக்க வரவேண்டும் என எண்ணுகிறார்களோ, அவர்களை தவிர; மற்ற அனைவருக்கும் இது சிரமமான காரியமாகவே இருக்கும்.

 சூரா கஹ்ஃபு 18:28

காலையிலும், மாலையிலும் இறைவனுடைய முகத்தை நாடி வாழ்பவர்களுடன், உம்மை நீர் ஆக்கி கொள்ளுங்கள். மேலும் இதயத்தை அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் யார் மறந்துவிட்டார்களோ அவர்களுக்கு கீழ்படியாதீர்கள்.

 சூரா தவ்பா 9:111

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், செல்வங்களையும் வாங்கி பகரமாக அல்லாஹ் சுவனத்தை கொடுக்கிறான்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 4

ஸீரா பாகம் – 4

நேசம் இன்றி ஈமான் இல்லை

 சூரா மாயிதா 5:54

அல்லாஹ்வை நாம் நேசித்தால் அல்லாஹ் நம்மை நேசிப்பான், அல்லாஹ்வை நேசிப்பவன் பிறரின் பழியை பொருட்படுத்த மாட்டான்.

 நபி(ஸல்) அவர்களிடம் மறுமையைப் பற்றி ஒருவர் கேட்டார் – மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் – பதில் கூறியவர்; சொல்லும் அளவுக்கு ஒன்றும் செய்யவில்லை ஆனால் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் – யாரை நீ நேசித்தாயோ அவருடன் சொர்க்கத்தில் நீ இருப்பாய்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 3

ஸீரா பாகம் – 3

நேசம் இன்றி ஈமான் இல்லை

எவரிடம் மூன்று பண்புகள் உள்ளதோ அவர் ஈமானுடைய சுவையை சுவைத்துவிடுவார்.

 அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும்.

 தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டும்.

 இறை நிராகரிப்புக்கு திரும்பி செல்வதை நெருப்பில் போடுவதை போன்று வெறுக்கவேண்டும்.

 நபி(ஸல்) – தந்தையை விட, பிள்ளையை விட, உலகில் உள்ள அனைவரையும் விட, என்னை நேசிக்கும் வரை உண்மையான முஃமீனாக ஆக முடியாது.

 ஸூரத்துத் தவ்பா 9:24

 அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும் தவிர உலகில் வேறு எதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டாலும்; அல்லாஹ்வுடைய தண்டனையை எதிர்பார்த்து இருங்கள்.

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 2

ஸீரா பாகம் – 2

நேசம் இன்றி ஈமான் இல்லை

நபி(ஸல்) அவர்களின் நேசம் :

  • நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் செய்த ஹிந்தாவை மன்னித்தார்கள்.
  • நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) வை, கொடூரமான முறையில் கொன்ற வஹ்ஷி யை மன்னித்தார்கள்.
  • மக்கா முஷ்ரிக்குகள் நபி(ஸல்) அவர்களுக்கு பல தீங்குகள் இழைத்திருந்தும்; மக்கா வெற்றிக்குப் பின் அவர்கள் அனைவரையும் நபி(ஸல்) அவர்கள் மன்னித்தார்கள்.

ஸூரத்துல் இன்ஃபிதார் – 6:

கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

ஸூரத்துல் ஃபுர்ஃகான் – 70:

அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கும் போது அவன் மன்னிப்பதோடு மட்டும் இல்லாமல் கடந்த கால பாவங்களை நன்மைகளாக மாற்றும் கருணையாளன்.

ஸூரத்துல் பகரா- 165 :

நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்.

ஸூரத்துல்ஆல இம்ரான் – 31 :

அல்லாஹ்வை நேசித்தால் அவனுடைய நபியை பின்பற்றுங்கள்.

ஸூரத்துல் அன்கபூத் – 2, 3, 4:

அல்லாஹ் நிச்சயமாக  நம் அனைவரையும் சோதிக்கிறான்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது அல்லாஹ் மீது உள்ள நேசம் உண்மையானால் அவனுடைய நபியை பின்பற்றுமாறு அவன் கூறுகின்றான்.

நபியுடைய வாழ்வு நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். إن شاء الله ஒவ்வொரு நாளும் நாம் அதற்காக முயற்சி செய்வோமாக.